யாழ்.மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினரது குடும்பத்தினர் மீது இளவாலை பொலிஸார் மூர்க்கத்தனமான தாக்குதல்! உறுப்பினரும், சகோதரியும் வைத்தியசாலையில் அனுமதி...

ஆசிரியர் - Editor I
யாழ்.மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினரது குடும்பத்தினர் மீது இளவாலை பொலிஸார் மூர்க்கத்தனமான தாக்குதல்! உறுப்பினரும், சகோதரியும் வைத்தியசாலையில் அனுமதி...

யாழ்.மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரையும் அவருடைய சகோதரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது இளவாலை பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றது. 

மேலும் இந்த சம்பவத்தையடுத்து பிரதேசசபை உறுப்பினர் மற்றும் அவருடைய சகோதரி 1990 அம்புலன்ஸ் வண்டி மூலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தகவல் தருகையில், 4ம் திகதி மாலை மின்வெட்டு அமுலில் இருந்த நிலையல் மதுபோதையுடன் வீட்டிற்குள் நுழைந்த நபர் ஒருவர் பிரதேசசபை உறுப்பினரின் தந்தையை தாக்க முயன்றதுடன், 

வீட்டு வேலியை சேதப்படுத்திவிட்டு சென்றிருந்தார். இந்த சம்பவத்தையடுத்து நேற்றய தினம் வாக்குமூலம் வழங்குவதற்காக தம்மை இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்ததாகவும், 

இதனடிப்படையில் தாம் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த சமயம் அங்கு எந்தவொரு வாக்குமூலமும் பெறப்படாமல் நேரம் இழுத்தடிக்கப்பட்ட நிலையில் தாம் வீடு திரும்பியதாகவும். 

இதனையடுத்த பிற்பகலில் வீடு தேடிவந்த பொலிஸார் பிரதேசசபை உறுப்பினர் மற்றம் சகோதரிகள், பெற்றோரை குண்டுக்கட்டாக துாக்கி சென்று கைது செய்ததாகவும் பின்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்று

மூர்க்கத்தனமாக பொலிஸார் தாக்கிய நிலையில் பிரதேசசபை உறுப்பினருடைய சகோதரி மயக்கமடைந்த நிலையிலும் பிரதேசசபை உறுப்பினரின் ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையிலும் இருந்துள்ளனர். 

இதற்கிடையில் குறித்த விடயம் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதற்கமைய இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நாடாளுமன்ற உறுப்பினர் தொலைபேசியில் 

தொடர்புகொள்ள முயற்சித்தபோதும் அது சாத்தியப்படாத நிலையில் பொலிஸ் நிலையத்திற்கு நோில் சென்றபோது பிரதேசசபை உறுப்பினரின் ஆடைகள் கிழிக்கப்பட்டு தாக்கதல் நடத்தப்பட்டுள்ளமையினையும், 

அவருடைய சகோதரி மயக்கமடைந்த நிலையில் கிடந்ததையும் அவதானித்து உடனடியாக 1990 அம்புலன்ஸ் வண்டி மூலம் தெல்லிப்பழை வைத்தியசாலையல் அனுமதித்ததாகவும் கூறப்பட்டது.



காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு