இ.போ.ச. பஸ் மோதிய முதியவர் ஒரு வாரத்தின் பின் உயிரிழப்பு

ஆசிரியர் - Admin
இ.போ.ச. பஸ் மோதிய முதியவர் ஒரு வாரத்தின் பின் உயிரிழப்பு

அரச பேருந்தால் மோதப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், சிகிச்சை பயனளிக்காமல் இன்று (2) உயிரிழந்தார் .

கடந்த மாதம் 24 ஆம் திகதி வீதியில் சென்ற பாதசாரி ஒருவரை மோதிய குற்றச்சாட்டில் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் சாரதியை கோப்பாய் பொலிஸார் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர்

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் இருபாலை சந்திப் பகுதியில் விபத்து இடம்பெற்றது.

“விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன், சந்தேகநபரான சாரதிக்கு இவ்வாறான  குற்றத்துக்கு இதற்கு முன்னரும் நீதிமன்றால்  தண்டம் அறவீடு செய்யப்பட்டது” என்று பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

சாரதி சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்திருந்த போதிலும் நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சாரதியை நாளைவரை ( 3.05.18) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சின்னத்தம்பி கோபாலகிருஸ்ணன் (வயது -68) என்ற முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.

திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணையை நடத்தினார். அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் பாரமளிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு