நாடு முழுவதும் தடையற்ற மின் விநியோகத்தை வழங்குங்கள்..! திட்டமிடப்பட்ட மின்வெட்டு குறித்த உயர்மட்ட கலந்துரையாடலில் ஜனாதிபதி பணிப்பு..
நாடு முழுவதும் தடையற்ற மின் விநியோகத்தை வழங்கமாறு ஜனாதிபதி பணித்துள்ளார். என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
மின்சார துண்டிப்பு தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்
இன்று (10) இடம்பெற்றது.இந்த கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி குறித்த பணிப்புரையை விடுத்ததாக
அதில் கலந்து கொண்டிருந்த மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.