SuperTopAds

பிரபல கானா பாடகி இசைவாணி முன்னாள் கணவர் மீது முறைப்பாடு!!

ஆசிரியர் - Editor II
பிரபல கானா பாடகி இசைவாணி முன்னாள் கணவர் மீது முறைப்பாடு!!

பிரபல கானா இசைப்பாடகியும், பிக் பாஸ் பிரபலமுமான இசைவாணி தனது முன்னாள் கணவர் மீது சென்னை தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

சக கானா பாடகர் சதீஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் திருமணம் நடந்த சில வருடங்களுக்கு பின் கணவரை விட்டு பிரிந்து தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தனது முன்னாள் கணவர் சதீஷ் குறித்து சென்னை தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். 

விவாகரத்தான முன்னாள் கணவர் சதீஷ் என்கிற பப்லு இசைவாணி பெயரில் போலி சமூக வலைத்தளம் உருவாக்கி மோசடி செய்வதாகவும், தன் பெயரில் பல நிகழ்ச்சிகளுக்கு முன்தொகை வாங்கியதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.

இதனால் தனக்கும் தன் கலை பயணத்திற்கும் இடையூறு ஏற்படுவதாக கூறி முன்னாள் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.