யாழில் அதிகரிக்கும் வெப்பநிலை: வானிலைப் பொறுப்பதிகாரி விடுத்துள்ள அறிவுறுத்தல்

ஆசிரியர் - Admin
யாழில் அதிகரிக்கும் வெப்பநிலை: வானிலைப் பொறுப்பதிகாரி விடுத்துள்ள அறிவுறுத்தல்

நேற்று முன்தினம் 26 ஆம் திகதி அதிகூடிய வெப்பநிலையாக யாழ்.மாவட்டத்தில் 36.2 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ள திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ம. பிரதீபன் எதிர்வரும் நாட்களில் வெப்பநிலையில் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் எமது செய்திச் சேவைக்கு விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்த மாதம் முதலாம் திகதி சூரியன் இலங்கைக்கு மேல் உச்சம் கொடுத்ததைத் தொடர்ந்து எமது வளிமண்டலத்தின் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுகின்றது.

கடந்த வருடத்தைப் போன்று இவ்வருடமும் 37 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்காரணமாகப் பகல் வேளைகளில் சூரிய ஒளியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும்.

இதனால், பொதுமக்கள் பகல் வேளைகளில் வீடுகளுக்கு வெளியே செல்லும் பொது அவதானமாகச் செயற்படுவதுடன் கூடியளவு நீர் அருந்துமாறும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.

இதேவேளை, தொடர்ந்து வரும் காலங்களில் பிற்பகல் வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இதன் போது ஏற்படும் இடிமின்னல் தாக்கங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் அவர் மேலும் கேட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு