முன்னணியின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது யாழ். மாநகர முதல்வரின் தரப்பு

ஆசிரியர் - Admin
முன்னணியின் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது யாழ். மாநகர முதல்வரின் தரப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னொல்ட் மீது தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர உறுப்பினர்கள் மறுத்துள்ளனர். அத்துடன், அவை தொடர்பில் முதல்வர் தரப்பு நியாயங்களை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் முன்வைக்கப்பட்டுள்ள உப குழுக்கள் நியமிக்கப்படாதை தொடர்பான குற்றச்சாட்டு ஏற்றக் கொள்ள முடியாதது எனக் குறிப்பிடும் தமிழ் தேசிய கட்சி உறுப்பினர்கள், வரும் 8ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த அமர்வின் ஆரம்பத்திலேயே உப குழுக்கள் அமைக்கப்படும் என கடந்த அமர்வில் அறிவிக்கப்பட்டது எனத் தெரிவித்தனர்.

“உப குழுக்கள் அமைக்கப்பட்ட பின்னரே மாநகர முதல்வர் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை முன்னெடுப்பார். இன்று வரை எந்தவொரு நிதிக் கொடுக்கல் வாங்கல்களையும் அவர் முன்னெடுக்கவில்லை.

பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட வீதிகளை சீரமைப்பதற்கான கேள்வி கோரல் விளம்பரம், 2017ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு அமைவான வேலைத்திட்டமாகும்” என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆர்னொல்ட், மோசடி மற்றும் அதிகார முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாரா? என்று ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சரான முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் இன்று மனுக் கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆர்னொல்ட், மோசடி மற்றும் அதிகார முறைகேட்டில் ஈடுபட்டுள்ளாரா என்று ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சரான முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனுக்கு இன்று மனுக் கையளிக்கப்பட்டது.

மாநகர முதல்வர், தனது இணைப்புச் செயலாளர்களாக யாரையும் நியமிக்க முடியும் எனக் குறிப்பிடும் அவர்கள், அதனை அதிகார முறைகேடு என வர்ணிப்பது நகைப்புக்கிடமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன், அடுத்த அமர்வு இரண்டு வாரங்களில் இடம்பெறவுள்ள நிலையில் சிறப்பு அமர்வைக் கூட்டுவதன் ஊடாக ஏற்படும் நிதிச் செலவை கட்டுப்படுத்தவே அதற்கு முதல்வர் முன்வரவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நியாயப்படுத்துகின்றனர்.

இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், தனது கடமைக்கு திரும்பாத நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முறைப்பாட்டு மனுவை முதலமைச்சரின் செயலாளர் பெற்றுக்கொண்டார்.

முதலமைச்சர் கடமைக்கு திரும்பிய பின்னரே இதுதொடர்பான இறுதி விவரம் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு