சாட்சியங்களை முற்படுத்த பொலிஸார் தவறினர் - வாள்வெட்டு சந்தேகநபர்களை விடுவித்தது நீதிமன்று

ஆசிரியர் - Admin
சாட்சியங்களை முற்படுத்த பொலிஸார் தவறினர் - வாள்வெட்டு சந்தேகநபர்களை விடுவித்தது நீதிமன்று

பொலிஸாரால் சாட்சியங்கள் ஒழுங்கான முறையில் முற்படுத்தப்படாமையால் வாள்வெட்டு சந்தேகநபர்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாட்சியங்கள் இல்லாது சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம் முன்வைக்கப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நீதிமன்று எச்சரித்தது.

யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து வெளிவருகின்ற பத்திரிகையொன்றின் அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற இளைஞர் ஒருவர் கடந்த வருடம் ஜனவரி மாதம் ஐந்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வந்த வாள்வெட்டு குழுவினரால் வெட்டி காயப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 10 இளைஞர்கள் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவர்களில் ஏழு பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அவர்களுக்கெதிரான வழக்கு விசாரணை கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் விளக்கத்துக்கு எடுக்கப்பட்டது. அங்கு சாட்சியமளித்த சாட்சிகள் எவரும் வாளால் வெட்டியவர்களை தாங்கள் காணவில்லையென சாட்சியமளித்தனர்.

அத்துடன் விசாரணை உத்தியோகத்தரான பொலிஸ் பரிசோதகர் முதித்த பண்டாரவும் உறுதியான சாட்சியங்களை முன்வைக்கவில்லை.

அதனைத் தொடர்ந்து சந்தேகநபர்களுக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லாததால் அவர்களை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு நீதிவான் கட்டளையிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு