பருத்தித்துறை வீதியில் சென்ற பாதாசாரி ஒருவரை மோதிய குற்றச்சாட்டில் இ.போ.ச. சாரதி கைது

ஆசிரியர் - Admin
பருத்தித்துறை வீதியில் சென்ற பாதாசாரி ஒருவரை மோதிய குற்றச்சாட்டில் இ.போ.ச. சாரதி கைது

வீதியில் சென்ற பாதாசாரி ஒருவரை மோதிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் சாரதியை வரும் மே 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கோப்பாய், யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் சென்ற பாதாசாரியை மோதினார் என்ற குற்றச்சாட்டிலேயே இ.போ.ச. பேருந்து சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

சாரதியை கோப்பாய் பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தினர். “விபத்தில் படுகாயமடைந்த முதியவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சந்தேகநபரான சாரதி இதே குற்றத்துக்கு இதற்கு முன்னரும் நீதிமன்றால்  தண்டம் அறவீடு செய்யப்பட்டது” என்று பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

சாரதி சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி பிணை விண்ணப்பம் செய்தார். இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன், சாரதியை வரும் மே 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு