வடக்கு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்குமாறு ஆளுநர் உத்தரவு!

ஆசிரியர் - Admin
வடக்கு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்குமாறு ஆளுநர் உத்தரவு!

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, விசாரணைகளை முன்னெடுத்து உண்மை நிலை அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு பிரதம செயலாளருக்கு வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அண்மையில் செய்தி வெளியானது. இதுகுறித்து வடமாகாண ஆளுநரிடம் ஊடகவியலாளர்கள் இன்று வினவியபோதே இதுபற்றி ஆளுநர் தகவல் வெளியிட்டார்.

“மாகாண அமைச்சர்கள் மீதான மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மை நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதம செயலாளருக்குப் பணித்துள்ளேன். அந்த அமைச்சர்கள் தொடர்பில் தற்போது எதுவுமே கூற முடியாது. விசாரணையின் பின்னரே எந்த முடிவுக்கும் வர முடியும்” என தெரிவித்தார்.

இதேவேளை, மோசடிக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பிரதம செயலாளர் ஊடாக விசாரணை நடத்துமாறு வடமாகாண முதலமைச்சருக்கு வடமாகாண ஆளுநர் கடந்த 10 ஆம் திகதி கடிதம் அனுப்பியிருந்தார். எனினும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையிலேயே, பிரதம செயலாளருக்கு ஆளுநர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் முதலாவது அமைச்சரவையில் இடம்பெற்ற அமைச்சர்கள் இருவர் மீது மோசடிக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, அவர்கள் இருவரும் பதவி விலகி ஓராண்டு நிறைவடைய முன்னர் புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள் மீது மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு