ஸ்ரீதர் தியேட்டரை விடுவிக்ககோரி டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக வழக்கு...

ஆசிரியர் - Editor I
ஸ்ரீதர் தியேட்டரை விடுவிக்ககோரி டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக வழக்கு...

ஸ்ரீதர் தியேட்டரை டக்ளஸ் தேவானாந்தாவிடம் இருந்து மீட்டுத் தருமாறு தியட்டரின் 6 கூட்டுச் சொந்தக்கார்ர்களும் இணைந்து நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நீதிமன்றில் சட்டத்தரணி ஊடாக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

இரத்தினசபாபதி -ஸ்ரீதர் உள்ளிட்ட 6  வழக்காளர்களிற்குச் சொந்தமான ஸ்ரீதர் தியட்டரினை கடந்த 1996ம் ஆண்டு முதல் 20 ஆண்டுகளாக எந்தவிதமான அனுமதியோ அல்லது வாடகையோ இன்றி சட்டவிரோத இருப்பாட்சியை டக்ளஸ் தேவானந்தா மேற்கொள்கின்கின்றார்.

இதன் காரணமாக உரிமையாளர்களாகிய எமக்கு மாதம் ஒன்றிற்கு 75 ஆயிரம் ரூபா வீதம் ஏட்பட்ட  நட்டமும் அதன் வட்டியினையும் இணைத்து வழங்குவதோடு இதுவரை காலத்திற்குமான இழப்பீடாக 100 மில்லியன் ரூபாவினையும் , தற்போது இடம்பெறும் வழக்குச் செலவுடன் கட்டிட உரித்தினையும் பெற்றுத் தருமாறுகோரியே மேற்படி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த வழக்கானது சட்டத்தரணி கேசவன் - சயந்தன் மூலம் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில்  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த தியட்டரே தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணக் குடாநாட்டில் அரசியல். பிரவேசம் செய்தநாள் முதல் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு