வவுனியா வளாக முறுகல் நிலையை தீர்க்க யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் வவுனியா பயணம்..

ஆசிரியர் - Editor I
வவுனியா வளாக முறுகல் நிலையை தீர்க்க யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் வவுனியா பயணம்..

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாக நிர்வாகம் மற்றும் சிங்கள மாணவர்கள் இடையே பேச்சு நடத்தி அங்கு சுமுக நிலையைத் தோற்றுவிப்பதன் ஊடாக, வளாக கற்கைகளை மீள ஆரம்பிக்கும் நோக்குடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் வவுனியாவுக்கு புறப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவ சிங்கள மாணவர்கள் முயற்சித்ததால் எழுந்த பதற்ற நிலையை அடுத்து அந்த வளாகம் காலவரையின்றி மூடப்பட்டது.

நிர்வாகத்திடம் எந்தவொரு அனுமதியையும் பெறாது சிங்கள மாணவர்கள் தன்னிச்சையாக புத்தர் சிலையை நிறுவ முற்பட்டதால், வளாக நிர்வாகம் அதற்கு தடை விதித்தது. அதனால் சிங்கள மாணவர்கள் பெரும் நெருக்குதல்களை வளாக நிர்வாகத்துக்கு ஏற்படுத்தினர். அதனால் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்தே யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் காலவரையின்றி மூடப்பட்டது.

இந்த நிலையில் வவுனியா வளாக நிர்வாகம் மற்றும் மாணவர்களுடன் பேச்சு நடத்தி சுமூக நிலையைத் தோற்றுவிக்கும் நோக்கில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் குழு அங்கு புறப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு