மீசாலையில் சிரட்டையில் தேநீர் குடிக்கும் மக்கள்: ஓர் நேரடி அனுபவம் VIDEO

ஆசிரியர் - Admin
மீசாலையில் சிரட்டையில் தேநீர் குடிக்கும் மக்கள்: ஓர் நேரடி அனுபவம் VIDEO

யாழ்ப்பாணத்தில் சிரட்டையில் தேநீர் குடிக்கும் பாரம்பரியம் முன்பொரு காலத்தில் காணப்பட்ட போதும் தற்போதைய காலத்தில் மிகவும் அருகி விட்டது.

ஆனால், யாழ். மீசாலையின் தற்போதும் அந்தப் பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வருவதை என்னால் நேரடியாக அவதானிக்க முடிந்தது.

யாழ். மீசாலை வடக்கு கட்டு வைரவர் ஆலயத்தில் சித்திரைப் பரணி உற்சவத்தை முன்னிட்டுக் கடந்த செவ்வாய்க்கிழமை(17) சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது.

இந்த ஆலயம் வயல்களின் நடுவே அமைந்துள்ளது. ஆலயம் சிறிதாயினும் அந்தப் பகுதி முழுவதும் கட்டுவைரவர் ஆலயத்தைப் பற்றியே பேச்சு.

குறித்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளின் ஒரு கட்டமாக அன்னதானம் வழங்குவதற்காக ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருந்த மக்கள் தங்கள் களைப்பைப் போக்குவதற்காகச் சிரட்டைகளில் தேநீர் அருந்தினர். இந்தக் காட்சி எங்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

இது தொடர்பில் சிரட்டையில் தேநீர் அருந்திய நடுத்தர வயது குடும்பஸ்தவரொருவரிடம் பேச்சுக் கொடுத்த போது,விலைகூடிய எந்தப் பேணியில் தேநீர் குடித்தாலும் கிடைக்காத திருப்தி சிரட்டையில் தேநீர் அருந்தும் போது கிடைக்கிறது. 

அதுவும் வேலை செய்து களைத்த நேரத்தில் பலருடனும் இணைந்து சிரட்டையில் தேநீர் குடிப்பதில் எனக்கு அலாதிப் பிரியம். தற்காலத்தில் சிரட்டைகளில் தேநீர் குடிப்பதைப் பலரும் கெளரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள். ஆனால், நான் ஒருபோதும் அவ்வாறு நினைத்ததில்லை. எங்கள் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதில் நாங்கள் ஒருபோதும் பின்னிற்கக் கூடாதென்றார்.

இதேவேளை, சிரட்டையில் தேநீர் குடிக்கும் வழக்கம் யாழில் மிகவும் அருகிப் போயுள்ள நிலையில் தற்போதும் மீசாலையின் பலவிடங்களில் சிரட்டையில் தேநீர் குடிக்கும் வழக்கம் இருந்து வருகின்றமை பலரும் அறிந்திராத விடயம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு