யாழ்.மாநகரசபை உறுப்பினரால் வீதிகளுக்கு விடிவு

ஆசிரியர் - Admin
யாழ்.மாநகரசபை உறுப்பினரால் வீதிகளுக்கு விடிவு

அண்மையில் பெய்த கடும் மழையால் பாதிக்கப்பட்ட வீதிகளை புனரமைப்புச்செய்யும் வேலைகளை யாழ்.மாநகரசபையின் பொறியியற்பிரிவு ஆரம்பித்துள்ளது.

யாழ்.மாநகரசபையின் 02ஆம் வட்டாரத்துக்குட்பட்ட சில வீதிகளும், ஒழுங்கைகளும் அண்மையில் பெய்த மழையால் கடும் பாதிப்படைந்துள்ளமை குறித்து யாழ்.மாநகரசபையின் 02 ஆம் வட்டார உறுப்பினர் ப.தர்சானந் யாழ். மாநகரசபை மேயர் மற்றும் பொறியியற்பிரிவின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்ததுடன் உடனடியாக புனரமைப்புகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டிருந்தார்.

இதனையடுத்துத் துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட மாநகரசபையினரால் இரண்டாம் வட்டாரத்துக்குட்பட்ட பிறவுண் வீதி- கலட்டிச்சந்தி பகுதியில் வீதியில் காணப்பட்ட குழிகளை இட்டு நிரப்பி காப்பற் வீதியாக அமைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் குறித்த வீதிப் புனரமைப்புச் செயற்பாடுகளை இன்று வியாழக்கிழமை (19) முற்பகல் – 11 மணியளவில் யாழ்.மாநகரசபையின் துணை மேயர் து.ஈசன் மற்றும் யாழ்.மாநகரசபையின் 02 ஆம் வட்டார உறுப்பினர் ப.தர்சானந் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், பொறியியற்பிரிவின் தொழிலாளர்களுடனும் கலந்துரையாடினார்.

இதன்போது மனித வலுவினை மட்டும் கொண்டு தார்க்கலவை தயாரிக்கப்படுவதால் வீதிப் புனரமைப்பு வேலைகள் தாமதமடைகின்றன எனவும், இதற்கான இயந்திர சாதனங்களைப் பெற்றுக்கொடுக்க முடியுமாயின் விரைவாக வேலைகளை முடிக்க முடியும் எனவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக உரிய தரப்பினரிடம் பேசிச் சாதகமான முறையில் பதிலளிக்கப்படும் என துணைமேயர் மற்றும் உறுப்பினர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு