அராலியில் ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தைக்கு ஏற்பட்ட துயரம்

ஆசிரியர் - Admin
அராலியில் ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தைக்கு ஏற்பட்ட துயரம்

யாழ். அராலியில் அதிகளவு மதுபானம் அருந்திய நிலையில் கொய்யாக்காய் என நினைத்து ஒருவகை நச்சு விதையை உட்கொண்ட குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த சனிக்கிழமை சித்திரைப் புத்தாண்டு தினத்தன்று குறித்த குடும்பஸ்தருக்கு அவரது பிள்ளைகளால் ஒரு தொகைப் பணம் கைவிசேடமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பணத்தை எடுத்து அதிகளவு மதுபானம் அருந்திய அவர் கொய்யாக்காய் என நினைத்து ஒருவகை நச்சு விதையை உட்கொண்டுள்ளார்.

இதனையடுத்து மயக்கமடைந்த மேற்படி குடும்பஸ்தரை அவரது பிள்ளைகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதித்த போதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றிக் குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

யாழ். அராலி வடக்கைச் சேர்ந்த ஐந்து பெண் பிள்ளைகளின் தந்தையாரான சின்னையா பற்குணராஜா(வயது-51) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு