வடகிழக்கில் 13 ஆயிரத்து 14 ஏக்கர் நிலம் இராணுவத்தின் வசம்..

ஆசிரியர் - Editor I
வடகிழக்கில் 13 ஆயிரத்து 14 ஏக்கர் நிலம் இராணுவத்தின் வசம்..

வடகிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களுக்கு சொ ந்தமான 13 ஆயிரத்து 14 ஏக்கர் நிலம் மட்டுமே இரா ணுவத்தின் வசம் உள்ளதாக ஐனாதிபதி செயலகத் தில் நேற்றய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலி ல் மீள்குடியேற்ற அமைச்சு கூறியுள்ளது.

வடக்கு மாகாணத்தில் படையினர் வசம் உள்ள நிலம் தொடர்பில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே மேற்படி தரவுகளை மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சமர்ப்பித்துள்ளார்.

இவ்வாறு சமர்ப்பித்த விபரத்தில் அதிக பட்சமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 ஆயிரத்து 599.66 ஏக்கர் நிலம் உள்ளதோடு  முல்லைத்தீவு மாவட்டத்தில்.  1150  ஏக்கரும் , வவுனியா மாவட்டத்தில் 1872  ஏக்கரும். மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 391  ஏக்கரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 1515 ஏக்கரும் என வடக்கில் 11 ஆயிரத்து 528.66 ஏக்கர் நிலம் முப்படையினர் வசமுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 563 ஏக்கரும் , மட்டக்களப்பு மாவட்டத்தில் 766 ஏக்கரும் அம்பாறையில் 156. 40 ஏக்கர் நிலமும்  படையினர் வசம் உள்ளதாகவும் இதன் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் 1485 ஏக்கர் நிலமுமாகவே குறித்த 13 ஆயிரத்து 14 ஏக்கர் மக்களிற்கான நேரடி நிலங்கள் படையினர் வசம் உள்ளதாக  சுட்டிக்காட்டப்பட்டது. 

இதேநேரம் அரச திணைக்களங்கள் , அமைச்சுகளிற்கான நிலங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியதோடு முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட சில மாவட்டத்தின் தரவுகள் பிழையாக உள்ளதாக கூறுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு