இப்படியும் திருட்டா?: யாழில் நடந்த நூதனத் திருட்டு

ஆசிரியர் - Admin
இப்படியும் திருட்டா?: யாழில் நடந்த நூதனத் திருட்டு

யாழ். தென்மராட்சியில் அரைஞாண் கொடிகளைத் தாலிக் கொடிகள் என நூதனமாக ஏமாற்றி அடகு வைத்துப் பெறுமதியான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யாழ்.தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள மூன்று நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்ட தாலிக் கொடிகள் பலநாட்களாகியும் மீளவும் மீட்கப்படவில்லை. இதனையடுத்து குறித்த நிதிநிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் அடகு வைத்தவரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று விசாரித்துள்ளனர்.

அங்கு விசாரித்த போது ஏமாற்றமே அவர்களுக்கு மிஞ்சியது. எந்த நபரின் பெயரில் குறித்த தாலிக் கொடிகள் அடகு வைக்கப்பட்டிருந்தனவா? அந்நபர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே இறந்துவிட்டார்.

இறந்தவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தியே மேற்படி தாலிக் கொடிகள் அடகு வைக்கப்பட்டுள்ள விடயம் தற்போது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அடகு வைக்கப்பட்ட தாலிக்கொடிகளைப் பரிசோதித்த போது தான் குறித்த நிதி நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவை வெறும் வெள்ளி அரைஞாண் கொடிகள். தங்க முலாமிட்டுத் தாலிக்கொடிகள் போன்று நூதனமாக இயந்திரங்களால் உருமாற்றப்பட்டு அடகு வைக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆடிப்போன நிதிநிறுவன அதிகாரிகள் தற்போது தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு