வலி,வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் அபாயகரமான வெடி பொருட்கள்..

ஆசிரியர் - Editor I
வலி,வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் அபாயகரமான வெடி பொருட்கள்..

யாழ்.வலிகாமம் வடக்கில் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்ட பகுதிகளில் அபாயகரமா ன வெடி பொருட்கள் அகற்றப்படாத நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டும் மக்கள், வெடி பொருட் க்கள் காணப்படுவதால் மீள்குடியேற்றத்திற்காக காணிகளை துப்புரவு செய்வதற்கே அச்சமாக உள்ள தாகவும் கூறியுள்ளதுடன், பொறுப்பானவர்கள், நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுள்ளனர். 

28 வருடங்களாக வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் நிலம் கடந்த 13ம் திகதி மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் மீள கையளிக்கப்பட்டிருக்கின்றது. 28 வருடங்கள் மக்கள் நடமாட்டமே இல்லாமல் இருந்த மேற்படி 683 ஏக்கர் நிலப்பகுதி பற்றை காடாககாட்சியளிக்கின்றது. இ ந்நிலையில் காணிகளுக்கு சொந்தமான மக்கள் தமது காணிகளை துப்புரவாக்கி வருகின்றனர். 

இதன்போது ஆங்காங்கே அபாயகரமான வெடிபொருட்கள் இருப்பதை மக்கள் கண்டு பிடித்துள்ளனர். குறிப்பா க தென்மயிலை கிராமத்தில் கிணற்று தொட்டி ஒன்றுக்குள் பெருமளவான வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்த மக்கள் கடந்த 14ம் திகதி பொறுப்புவாய்ந்த தரப்புக்களுக்கு வெடிபொருட்கள் உள்ளமை தொடர்பாக கூறியுள்ளனர். ஆயினும் அன்றைய தினம் புதுவருடம் என்பதால் வெடி பொருட்களை அகற்றுவதற்கு ஆட்கள் இல்லை என கூறப்பட்டிருக்கின்றது. 

மேலும் கிணற்று தொட்டிக்குள் வெடி பொருட் கள் இருப்பதை மக்கள் அடையாளம் கண்ட பின்னர் அங்கிருந்து பல வெடி வொருட்கள் காணாமல்போ யுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். இதேபோல் கடந்த 13ம் திகதி மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக் கப்பட்ட காணிகளில் பல இடங்களில் அபாயகரமான வெடி பொருட்கள் அகற்றப்படாமல் உள்ளதாக கூறும் மக்கள் 

வெடி பொருட்கள் உள்ள பகுதியில் பற்றைகளை வெட்டி துப்புரவு செய்யவும், நடமாடவும் அச்சமாக உள்ளதாகவும், இந்த வெடி பொருட்களை விரைவாக அகற்றி மக்கள் அச்சமில்லாமல் தமது காணிகளை துப்புரவு செய்து மீள்குடியேறுவதற்கான ஒழுங்குகளை பொறுப்புவாய்ந்தவர்கள் செய்து  கொடுக்கவேண்டும் எனவும்  கேட்டுள்ளனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு