பலமான தமிழ் கட்சி ஒன்று உருவாவதை ஜக்கிய தேசிய கட்சி விரும்பாது..

ஆசிரியர் - Editor I
பலமான தமிழ் கட்சி ஒன்று உருவாவதை ஜக்கிய தேசிய கட்சி விரும்பாது..

ஜக்கிய தேசிய கட்சி பலமான தமிழ் கட்சி ஒன்று உருவாகுவதை விரும்புவதில்லை என கூறியிருக்கும் அமைச்சர் மனோகணேஷன், அதையும் மீறி ஒரு தமிழ் கட்சி பலமாக உருவாகினால் அது தமக்கு சார்பாக இருக்கவேண்டும். என ஜக்கிய தேசிய கட்சி விரும்பும்.

மேற்கண்டவாறு கூறியிருக்கும் அமைச்சர் மனோகணேஷன் இந்த உண்மையை கூ றுவதற்கு நான் அச்சப்படவில்லை எனவும் கூறியுள்ளார். சமகால அரசியல் நிலமைக ள் தொடர்பில் இன்று யாழ்.ஊடக அமைய த்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப் பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மனோகணேஷன் மேற்கண்டவா று கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில், ஐ னாதிபதியின் கீழ் உள்ள தேசிய ஒருமைப் பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சை என் அமைச்சின் கீழ் தருவதாக அண்மையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி கூறியிருந்தார்.

அப்போது தலையிட்ட அமைச்சர் மங்கள சமரவீர அந்த அமைச்சு துறையை ஐனாதிப தியே வைத்திருப்பது நல்லது என கூறியி ருந்தார். மேலும் சர்வதேசத்தின் கவனத்தி னை அது கொண்டிருக்கிறது. எனவும் கூறினார். பின்னர் நான் அமைச்சர் மங்களவுட ன் பேசும்போது கூறினேன் சர்வதேசத்தின் கவனத்தை கொண்டிருப்பது முக்கியமல்ல.

சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என. அவ்வாறு ஐக் கிய தேசிய கட்சி பலமான ஒரு தமிழ் கட்சி உருவாகுவதை ஜக்கிய தேசிய கட்சி விரு ம்புவதில்லை. அப்படியே ஒரு பலமான தமி ழ் கட்சி உருவானாலும் அந்த கட்சி தமக்கு சாதகமாக இருக்கவேண்டும் என நினைப்பார்கள் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு