பதில் முதலமைச்சராக -சர்வேஸ்வரன்

ஆசிரியர் - Admin
பதில் முதலமைச்சராக -சர்வேஸ்வரன்
வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இந்தியாவிற்கான பயணம் மேற்கொண்ட காரணத்தினால் பதில் முதலமைச்சராக வடக்கு மாகாண கல்வியமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் அவர் இன்று பதில் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் 14 நாட்கள் வெளிநாடு சென்றுள்ள நிலையில், அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் பதில் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு