யாழ் மாணவனின் விபரீத முடிவால் பறி போன உயிர் - அதிர்ச்சியில் பெற்றோர்

ஆசிரியர் - Admin
யாழ் மாணவனின் விபரீத முடிவால் பறி போன உயிர் - அதிர்ச்சியில் பெற்றோர்

யாழ்ப்பாணத்தில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாணவன் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 16 வயதான தியாகேஸ்வரன் நிலாபவன் நேற்று அதிகாலை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தில் கற்ற தியாகேஸ்வரன் நிலாபவன், கடந்த க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் வாந்தி எடுத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு 11.30 அளவில் குறித்த மாணவன் வாந்தி எடுத்துள்ளார். அவரை கோப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது. எனினும் அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அவர் உயிரிழந்து விட்டார் என்பதை வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.

அவர் ஒரு வகை நச்சுத் திரவத்தை அருந்தி உயிரிந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவருகிறது. ஆனால் அது என்ன திரவம் என்பது உடற்கூற்றுப் பரிசோதனையில் தெரியவரவில்லை.

மாணவன் அருந்தியது திரவம் என்பது பற்றி ஆராய அவரது உடற்பாகம் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளது. மரண பரிசோதனையை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை நடத்தினார்.

உயர் கல்வியை எங்கு தொடர்வது என்பது தொடர்பில் பெற்றோருக்கும் மாணவருக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் உயர் கல்வியை தொடர வேண்டும் என பெற்றோர் கோரிய போதும், வட்டக்கச்சியில் உயர் கல்வி கற்றப்போவதாகக் மாணவன் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான வாதங்கள் இடம்பெற்ற நிலையில், மாணவனின் மரணம் சம்பவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவொரு தற்கொலையாக இருக்கலாம் என அறிவிக்கப்பட்ட போதிலும், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு