நடிகர் கருணாஸின் முயற்சி சிறந்த முயற்சி...

ஆசிரியர் - Editor I
நடிகர் கருணாஸின் முயற்சி சிறந்த முயற்சி...

ஈழ தமிழ் மாணவர்களின் உயர்கல்விக்காக தொழிநுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக் குவதற்கு நடிகர் கருணாஸ் எடுத்திருக்கும் நடவடிக்கை சிறந்த நடவடிக்கை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். 

ஈழ தமிழ் மாணவர்களுக்காக தனியான பல்கலைக்கழகம் ஒன்றை கட்டவுள்ள தென்னிந்திய நடிகர் கருணாஸ், நேற்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை நேரில் சந்தித்து பேசியிருந்தார்.

இதன்போது புதிய பல்கலைக்கழக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட தமிழகம் வருமாறு முதலமைச்சரை கருணாஸ் அழைத்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு தகவல் தரும்போதே மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் முகாம்களில் உள்ள மாணவர்கள் கல்வியில் சிறந்த முன்னேற்றத்தை காட்டினாலும் உயர்கல்வியை தொடரும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை.

இதனாலேயே கருணாஸ் தனியான பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறார். அவருடைய முயற்சி சிறந்த முயற்சியாகும். அதனாலேயே அவருடைய பல்கலைக்கழக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக தமிழகம் செல்வதற்கு நான் இணங்கியிருக்கிறேன். 

மேலும் தமிழக பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வை உண்டாக்கி இங்குள்ள மாணவர்கள் உயர்கல்வியை தமிழகத்தில் தொடரும் வாய்ப்பை பெற்று கொடுக்கும்படியும், 

விவசாயதுறை சம்மந்தமாகவும் விவசாய துறையில் நவீன வசதிகள் தொடர்பாகம் எமது மா ணவர்கள் தமிழகத்தில் கல்வியை தொடர்வதற்கு புலமைபரிசில் வசதியை பெற்றுக் கொடுக் கும்படியும், தமிழகத்தில் உள்ள முதலீட்டாளர்கள் இங்கேவந்து முதலீடுகளை செய்வதற்கான வழிவகைகளை செய்யுமாறும் கேட்டிருக்கிறேன். அதன பரிசீலிப்பதாக அவர் கூறியுள்ளார் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு