ஜேர்மனி தோற்றதால் கதறி அழுத சிறுமிக்கு 78 இலட்சம் ரூபா நிதி!!
யூரோ கிண்ணம் கால்பந்து சாம்பியன்சிப் தொடரில் கடந்த 29 ஆம் திகதி ஜேர்மனி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்றது.
இப் போட்டியில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜேர்மன் அணியை தோற்கடித்து கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 1966 ஆம் ஆண்டுக்கு பின் நொக்-அவுட் சுற்றில் ஜேர்மனி இங்கிலாந்து அணி வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.
இந்த போட்டியை பார்க்க வந்த ஜேர்மனைச் சேர்ந்த சிறுமி ஒருவர், ஜேர்மன் அணி தோல்வி அடைந்த காரணத்தினால் அழத் தொடங்கியுள்ளார். அந்த காட்சி மைதானத்தில் உள்ள திரைகளிலும் ஒளிபரப்பானது.
இணையத்தில் இந்த சம்பவம் வைரலாக பரவிய நிலையில், அந்த சிறுமிக்கு ஆதரவு தெரிவித்து இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் பலர் கருத்து பதிவிட்டனர்.
இதற்கிடையில் அந்த சிறுமிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜோயல் {ஹயுக்ஸ் என்பவர் 50,000 பவுண்டுகளை இலக்காக வைத்து இணையத்தில் நிதி திரட்ட ஆரம்பித்தார்.
எனினும், அவர் எதிர்பார்த்ததை விட அந்த சிறுமிக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்தனர். இதன் மூலம் அந்த சிறுமிக்காக 28,500 பவுண்டுகள் நிதி திரட்டப்பட்டுள்ளது. இது இலங்கை நாணய மதிப்பில் சுமார் 78 இலட்சம் ரூபா ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.