பிரபல நகைச்சுவை நடிகர் கருணாஸ் யாழ். வருகை – முதலமைச்சரை நாளை சந்திக்கிறார்

ஆசிரியர் - Admin
பிரபல நகைச்சுவை நடிகர் கருணாஸ் யாழ். வருகை – முதலமைச்சரை நாளை சந்திக்கிறார்

பிரபல நகைச்சுவை நடிகரும் தமிழக சட்டசபையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் (கருணாநிதி) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார்.

அவர், வடக்கு மாகாண முதலமைச்சரை நாளைக் காலை (6) 9.30 மணிக்கு முதலமைச்சரின் இல்லத்தில் சந்திக்கிறார்.

தமிழகத்தில் ஈழச் சிறார்களின் கல்விக்காக தனது சொந்த நிதியில் கட்டியுள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை அழைத்து திறந்து வைக்கவுள்ளார்.

அதற்காக முதலமைச்சரை நேரில் வந்து அழைப்புவிடுக்கவே கருணாஸ் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

கருணாஸுடன் சட்டத்தரணி க.சுகாஷும் முதலமைச்சரை நாளை சந்திக்கவுள்ளனர்.

முதலமைச்சருடான சந்திப்பு நிறைவடைந்ததும் கருணாஸ் யாழ்ப்பாண செய்தியாளர்களைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, கிளிநொச்சி நகரில் 400 நாள்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தை நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களையும் கருணாஸ் நாளை நண்பகல் 12 மணிக்குச் சந்திக்கிறார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு