நல்லூர் பிரதேச சபை த.தே.கூட்டமைப்பு வசம்.

ஆசிரியர் - Editor I
நல்லூர் பிரதேச சபை த.தே.கூட்டமைப்பு வசம்.

யாழ்.நல்லூர் பிரதேச சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது. தவிசாளராக த. தியாகமூர்த்தி பெறுப்பேற்றார். 

நல்லூர் பிரதேச சபைக்கான முதலாவது சபை அமர்வு உள்ளூராட்சி ஆணையாளர் மா. பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் கூடியது. 

அதன் போது தவிசாளர் தெரிவுக்காக பெயரினை பிரேரிக்குமாறு கோரப்பட்ட போது , தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் த. தியாகமூர்த்தி பிரேரிக்கப்பட்டார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி க.வாசுகியை பிரேரித்தனர். 

அதனை தொடர்ந்து வாக்களிப்பு மூலம் தவிசாளர் தெரிவு இடம்பெறும் என ஆணையாளர் அறிவித்து , வாக்களிப்பு இரகசிய முறையிலா ? பகிரங்க முறையிலையா நடைபெற வேண்டும் என உறுப்பினர்களிடம் கேட்ட போது , பகிரங்க வாக்களிப்பு நடைபெற வேண்டும் என பெரும்பான்மையான உறுப்பினர்கள் கோரியதை அடுத்து பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. 

அதன் போது , தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரேரித்த த. தியாகமூர்த்தி 12 வாக்குகளையும் , தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரேரித்த க. வாசுகிக்கு 7 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர். 

அதனை தொடர்ந்து உப தவிசாளர் தெரிவின் போது , தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜெயகரனை பிரேரித்தது. அதன் போது வேறுயாரும் உப தவிசாளராக பெயரை பிரேரிக்காத நிலையில் உப தவிசாளராக ஜெயகரன் தெரிவானார். 





பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு