மயிலிட்டிக்கு மங்கள சமரவீர திடீர் விஜயம்!

ஆசிரியர் - Admin
மயிலிட்டிக்கு மங்கள சமரவீர திடீர் விஜயம்!

இலங்கை ஜனாதிபதிக்கான வடக்கு விஜயங்களின் போது மக்களது எதிர்ப்புக்கள் மும்முரமடைந்துள்ள நிலையில் தற்போது முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள மற்றும் செம்மணி நாயகி சந்திரிகாவை முன்னிறுத்தி தெற்கின் அரசியல் ஆரம்பித்துள்ளது.இதற்கு வழமை போன்றே முண்டுகொடுக்க தமிழ் தேசியக்கூட்டமைப்பு களமிறங்கியுள்ளது.

இனஅழிப்பிற்கான சர்வதேச விசாரணைகளை நீர்த்துப்போகச்செய்வதிலும் ஜநாவில் மஹிந்த கும்பலிற்கு பாதுகாப்பு பெற்றுக்கொடுத்ததிலும் பிரதான பங்கை ஆற்றியவர் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.அதே போன்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை உடைப்பதிலும் முக்கிய பங்கை அவர் ஆற்றியிருந்தார்.

இந்நிலையில் தற்போது சர்வதேச கட்டமைப்புக்களின் உதவியுடன் போர்க்குற்ற விசாரணைகளிற்கான கோரிக்கைகளை நீர்த்துப்போகச்செய்ய  அபிவிருந்தி திட்டங்களிற்கான நிதி எனும் தொனிப்பொருளுடன் முன்னைய மஹிந்த அரசு ஆரம்பித்து தோல்வியடைந்த திட்டங்களுடன் மங்கள மற்றும் சந்திரிகா அணி களமிறங்கியுள்ளது.

இந்நிலையில்  வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள தற்போதைய நிதி அமைச்சர் மங்கள சமரவீர முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது போராட்டத்தை பார்வையிட்டுள்ளார்.

நேற்று முல்லைத்தீவுக்குச் சென்ற அவர் முல்லைத்தீவு மாவட்டச்செயலகத்தில் அதிகாரிகளுடன் கலந்துரையாடிவிட்டு அங்கிருந்து புறப்படும் போது போராட்டக்காரர்களைக் கண்டுஇ தானாக அவர்களிடம் சென்று கலந்துரையாடியுள்ளார்.அவர்களின் போராட்டம் தொடர்பில் கேட்டறிந்ததாக தெரியவருகின்றது.

முன்னதாக கிளிநொச்சியில் போராட்டத்தை முன்னெடுத்துவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களை சந்தித்து ஒரு வருடம் தாண்டியும் நீடிக்கின்ற போராட்டங்களை கைவிட கோரியிருந்தார்.எனினும் அதனை போராட்டகாரர்கள் நிராகரித்திருந்தனர்.

முன்னதாக ஜனாதிபதியுடன் நடைபெற்ற பல சுற்று பேச்சுக்களில் எந்தவொரு தீர்வும் கிட்டியிராத நிலையில் தற்போது மங்கள தரப்பின் ஊடாக சமரசத்திற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையின் நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று மயிலிட்டிக்குச் சென்றார். அங்கு பொதுமக்களின் தேவை குறித்துக் கலந்துரையாடியதாகவும் வழமை போலவே சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனோர் போராட்டங்கள் மற்றும் நிலவிடுவிப்பு போராட்டகாரர்களை சந்திப்பதன் மூலம் இலங்கை அரசு இவ்விடயங்களில் அக்கறை கொண்டுள்ளதான பரப்புரைகளை ஆரம்பிக்க தற்போது தற்போது முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள மற்றும் செம்மணி நாயகி சந்திரிகாவை முன்னிறுத்தி நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.   

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு