தடுப்பூசி போட்டவர்களுக்கு குலுக்கல் பரிசு!! -ஒரு மில்லியன் டொலர்களை வென்ற 22 வயது அமெரிக்க பெண்-
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்காக நடத்தப்பட்ட குலுக்கல் பரிசில் 22 வயது பெண் ஒருவருக்கு ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது.
அந்நாட்டின் ஒஹியோ மாகாண அரசு மக்கள் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிப்பதற்காக வாரந்தோறும் குலுக்கல் பரிசை அறிவித்தது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கு ஒரு மில்லியன் டொலரும், 18 வயதுக்கு உட்பட்ட ஒருவருக்கு கல்லூரி கட்டணம் இலவசம் என்றும் அறிவித்தது.
மேலும் முதல் வாரம் நடந்த குலுக்கலில் 22 வயது பெண் பட்டதாரி ஒரு மில்லியன் டொலர்களையும், 14 வயது சிறுவன் கல்லூரி புலமைப்பரிசையும் தட்டிச் சென்றுள்ளார்.