தமிழர் நிலத்தில் சிங்கள கட்சிகள் ஆட்சியமைக்க இடமில்லை.

ஆசிரியர் - Editor I
தமிழர் நிலத்தில் சிங்கள கட்சிகள் ஆட்சியமைக்க இடமில்லை.

வவுனியா வடக்கு பிரதேச சபையில் சிங்கள கட்சிகள் ஆட்சியமைக்க இடமளிக்க கூடாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு வவுனியா வடக்கில் அதிக படியான ஆசனங்கள் பெற்றிருக்கும் நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்க மற்றய தமிழ்தேசிய கட்சிகள் உதவவேண்டும். 

என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் ஆகியோர் விடுத்திருந்த கோரிக்கையை தமிழ்தேசிய மக்கள் முன்னணி அங்கீகரித்துள்ளதுடன், தமிழ் கட்சி ஆட்சியமைக்க ஒத்துழைப்பு வழங்குவோம் என கூறியுள்ளது. 

வவுனியா வடக்கு பிரதேச சபையில் 12 ஆசனங்கள் பெற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ரா ஜபக்ஸ தலமையிலான பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியமைப்பதற்கு முயற்சிக்கின்றது. இதே வேளை 8 ஆசனங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பும், தல 3 ஆசனங்களை 

தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும், தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன பெற்றிருக்கின்றன. இந்நிலையில் 3 தமிழ் கட்சிகளும் இணையாது விட்டால் சிங்கள கட்சி ஆட்சியமைக்கவுள்ள நி லையில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா மற்றும் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞா

னம் ஆகியோர் தமிழ் கட்சிகளின் ஆதரவை கோரியுள்ளனர். இந்த கோரிக்கைக்கு இன்று பதில ளித்த தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்பு செயலாளர் வி.மணிவண்ணன், தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு பாரிய ஆபத்தில் உள்ள பகுதி வவுனியா வடக்காகும். 

அது தமிழ் மக்களுடைய நிலம். அங்கே தமிழர்களே ஆட்சியமைக்கவேண்டும். எனவே தமிழ் கட் சி ஒன்று ஆட்சியமைக்க தமிழ்தேசிய மக்கள் முன்னணி பூரண ஒத்துழைப்பை வழங்கும் என கூ றியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு