சித்திரைப் புத்தாண்டு முதல் தொன்டமனாறு பொன்னாலை வீதி திறக்கப்படுமென்கிறார் மகேஸ் சேனாநாயக்க!

ஆசிரியர் - Admin
சித்திரைப் புத்தாண்டு முதல் தொன்டமனாறு பொன்னாலை வீதி திறக்கப்படுமென்கிறார் மகேஸ் சேனாநாயக்க!

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு முதல் தொன்டமனாறு பருத்தித்துறை வீதி பொது மக்களினது முழுமையான பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுமெனத் தெரிவித்துள்ள இரானுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க அதே போன்று படையினர் வசமிருக்கின்ற பொது மக்களின் ஒரு தொகுதி காணகளையும் விடுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கீரிமலைப் பகுதியில் அமைக்கப்பட்ட நல்லிணக்கபுரம் இரண்டாம் கட்ட வீடுகளை பொத மக்களுக்கு வழங்கி வைத்து உரையாற்றுகையிலையே இரானுவத் தளபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், வரவிருக்கின்ற புதுவருடத்திற்கு முன்னதாக படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுமார் ஐநூறு ஏக்கர் காணியை விடுவிக்க வேண்டுமென அரச அதிபர் என்னிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். அதற்கமைய எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை; தேசிய பாதுகாப்பிற்கமைய மேற்கொள்ள இருக்கின்றோம்.

மேலும் இங்குள்ள மக்களின் நலன் கருதி தொண்டமனாறு பருத்தித்துறை பாதை பொது மக்கள் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகளில் மட்டுமே பொது மக்கள் பயணிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கின்றது. 

ஆகவே மக்களது நலன்களுக்காக எதிர்வரும் புத்தாண்டு முதல் அனைத்து வாகனங்களும் சென்று வரக் கூடிய வகையில் அந்த வீதியை மழுமையாக விடுவிக்க உள்ளோம். இங்கு நாங்கள் யாரிடமும் வாக்குக் கேட்டு வரவில்லை. நாம் மக்களுக்காகவே செயற்பட்டு வருகின்றோம். ஆகவே இங்குள்ள அரச அதிபர் கோரியதற்கமைய கலந்துரையாடல்களை மேற்கொண்டு தேசிய பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு எங்களுடைய நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு