மியான்மரில் இராணுவ ஆட்சியை எதிர்த்து போராடிய 1,25,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்!!
மியான்மர் நாட்டில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 1,25,000 ஆசிரியர்கள் மற்றும், 19,500 பல்கலைக்கழக பணியாளர்களை பணி இடைநீக்கம் செய்ய இராணுவ ஆட்சியாளர்கள் உத்தரைவிட்டுள்ளனர்.
அந்நாட்டில் கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து இராணுவ ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது.
இதனை எதிர்த்து மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மக்களோடு ஆசிரியர்களும், பல்கலைக்கழக கணியாளர்களும் ஒருங்கிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையிலேயே இராணுவத்திற்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற 1,25,000 ஆசிரியர்கள் மற்றும் 19,500 பல்கலைகழக பணியாளர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
அந்நாட்டின் அண்மைக்கால தரவுகளின்படி தற்போது 4.3 இலட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.