போர்குற்றங்கள் பற்றி பேச சிறீதரன் எம்.பி தகுதியற்றவரா?

ஆசிரியர் - Editor I
போர்குற்றங்கள் பற்றி பேச சிறீதரன் எம்.பி தகுதியற்றவரா?

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் போர்குற்றங்கள் தொடர்பாக பேசுவதற்கு தகுதியற்றவர். 

தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து தொண்டு நிறுவனங்களின் உதவியு டன் சி.சிறீதரன் வவுனியாவுக்கு ஓடியவர்.  

ஆகவே நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு போர்குற்றங்கள் தொடர்பாக என்ன தெரியு ம்? அவர் அதற்கு தகுதியற்ற ஒருவராகும்.

மேற்கண்டவாறு ஈ.பி.டி.பி கட்சி சார்ந்த யாழ்.மாநகரசபை உறுப்பினர் முடியப்பு றெமீடியஸ்  கூறியுள்ளார். 

இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே றெமீடியஸ் மேற்கண்டவாறு கூறினார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

ஈ.பி.டி.பி கட்சி போர் குற்றங்களை புரிந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கூறியிருக் கின்றார். 

அவருக்கு போர்குற்றங்கள் என்றால் என்னவென்று தெரிந்திருக்கவேண்டும். அவர் தான் இறுதி யுத்தத்திற்குள் வாழ்ந்ததாக கூறுகின்றார்.

ஆனால் கிளிநொச்சி இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது தொண்டு நிறுவனங்களின் உத வியுடன் வவுனியாவுக்கு ஓடியவர் சிறீதரன்.

சிறீதரன் இராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னதாகவே தமிழீழ விடுதலை புலிகளின் தளப தி தீபன் உள்ளிட்டோர் இறந்தார்கள். 

ஆகவே நாடாளுமன்ற உறுப்பினருடைய கடந்தகாலத்தை பற்றி பேசினால் வெட்ககேடான வி டயமாகிவிடும் என்றார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு