"வடக்கு மக்களின் அபிவிருத்திகளுக்கு வடக்கு மக்களே தடையாக இருக்ககூடாது" : அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன்

ஆசிரியர் - Admin

"வடக்கு மக்களின் அபிவிருத்திகளுக்கு வடக்கு மக்களே தடையாக இருக்ககூடாது" என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் இன்று (29) வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக நியமனம் வழங்குவது தொடர்பாக கலந்துறையாடல் ஒன்றுநடை பெற்றது. இதன்போதே அவர் இந் தவிடயத்தைக் குறிப்பிட்டார்.

இது தொடர்பி ல்அவர் மேலும் தெரிவிக்கையில்,

 "வடக்குமாகாணத்தில் ஏற்பட்ட  30 வருட கொடூர யுத்தம் காரணமாக அனைத்து விதமான அபிவிருத்திகளும் ஸ்தம்பிதம் அடைந்துவிட்டது. குறிப்பாக இலங்கையில் கல்வியின் முதல்மாவட்டமாக காணப்பட்ட யாழ். மாவட்டம் தற்போது பின்தள்ளபட்டுள்ளது. இதனை அபிவிருத்தி செய்ய பிரதமர் ரனில் விக்கிரம சிங்க அவர்களின் சிபார்சுக்கு அமைய 10 ஆண்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கபடவுள்ளது.

முதற்கட்டமாக வடமாகாண தொண்டர் ஆசிரியர்கள் 182 பேருக்கு நியமன கடிதம் வழங்கபட்டுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு நியமனம் வழங்க வேண்டாமெனவும் அனைவருக்கும் ஒன்றாக வழங்கப்படவேண்டுமெனவும்182 பேருக்கு மாத்திரம் நியமனம் வழங்கிவிட்டு எங்களை ஏமாற்றிவிடுவீர்களா என்றெல்லாம் கூறி ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.

உண்மையாக யுத்தகாலத்திலும் அதற்கு பின்னரும் வடக்கில் ஆசிரியர்தட்டுபாடு இருந்தபொழுது கல்விக்கும் கல்வி அமைச்சுக்கும் உறுதுணையாக இருந்த இந்த தொண்டர் ஆசிரியர்களை நாங்கள் மறக்கமாட்டோம். தொண்டர் ஆசிரியர்களை சுற்று நிரூபத்திற்கு ஏற்ப உள்வாங்குவதில் ஏற்பட்ட சிக்கலும் உள்ளுராட்சி தேர்தலுமே தாமத்திற்கு காரணம். இவ்வாறான நிலையில்  182 பேருக்கு முதற்கட்டமாக நியமனம் வழங்குவதை எதிர்ப்பது ஏற்றுக்கொள்ளமுடியாது.

செயற்பாடு வடக்கு மக்களின் அவிருத்திக்கு வடக்கு மக்களே தடையாக இருப்பதாக நான் கருதுகின்றேன்.  தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 494  வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமன ம்வழங்குவதற்கான நேர்முகபரீட்சை எதிர்வரும் ஏப்ரல் மாதம்  19, 20 ஆம் திகதிகளில் கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளது.

அந்தநேர் முகபரீட்சை முடிந்ததும் உடனடியாக நியமனம் வழங்குவோம். மொத்தமாக 676 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க நடவடிக்கைகள் மேற்க்கொள்ளபட்டுள்ளன. இவைகட்டாயம் வழங்கப்படும்" எனக்குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு