யாழில் ஆரம்பமானது வெள்ளரிப்பழ வியாபாரம்!

ஆசிரியர் - Admin
யாழில் ஆரம்பமானது வெள்ளரிப்பழ வியாபாரம்!

யாழ். குடாநாட்டில் பயிரிடப்பட்டுள்ள வெள்ளரிப்பழம் தற்போது விற்பனைக்கு வர ஆரம்பித்துள்ளது. குடாநாட்டில் 250 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் வெள்ளாரிப்பழச் செய்கையினை ஊடுபயிராக மேற்கொண்டு வருகின்றனர். 

யாழ். சங்குவேலி, மானிப்பாய் அச்சுவேலி, கோப்பாய், பண்டத்தரிப்பு, மாதகல், சுன்னாகம், மல்லாகம்,மருதனார்மடம்,திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் வெள்ளரிப்பழச் செய்கையை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளரிப்பழங்களின் அளவுக்கேற்ப பெரிய வெள்ளரிப்பழமொன்று–250 ரூபாவாகவும், சிறிய வெள்ளரிப்பழமொன்று-100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

யாழ். பண்ணைப் பகுதியில் இன்றைய தினம் (27) வெள்ளரிப்பழ வியாபாரம் அமோகமாக இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது. தற்போது யாழ்.குடாநாட்டை வெப்பம் வாட்டியெடுத்து வரும் நிலையில் எதிர்வரும் நாட்களில் வெள்ளரிப்பழ வியாபாரம் சூடு பிடிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு