பருத்தித்துறை, வல்வெட்டித் துறை நகர சபை தவிசாளர் தெரிவு இன்று!

ஆசிரியர் - Admin
பருத்தித்துறை, வல்வெட்டித் துறை நகர சபை தவிசாளர் தெரிவு இன்று!

எந்தக் கட்சிகளும் அறுதிப் பெரும்பான்மை பெறாத யாழ். மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகர சபைகளுக்கான தவிசாளர் தெரிவு இன்று செவ்வாய்க்கிழமை(27) இடம்பெறவுள்ளது.

நடைபெற்று முடிவடைந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பருத்தித்துறை நகர சபையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆறு ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது.

ஈ.பி.டி.பி-2, சுயேட்சைக் குழு-1, தமிழர் விடுதலைக் கூட்டணி-1 என்ற வகையில் ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தன. இந் நிலையில் இன்று இடம்பெறும் நகர முதல்வருக்கான தெரிவின் போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் வேட்பாளர்களை நிறுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, வல்வெட்டித்துறை நகரசபை முதல்வர் தெரிவும் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது. இங்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஏழு ஆசனங்களைக் கொண்டுள்ளது.சுயேட்சைக் குழு நான்கு ஆசனங்களையும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி என்பன தலா இரண்டு ஆசனங்களையும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா ஒரு ஆசனத்தையும் கொண்டுள்ளன.

இங்கு அறுதிப் பெரும்பான்மை பெற கூட்டமைப்புக்கு இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.கூட்டமைப்புக்கு ஆதரவளிக்க சுயேட்சைக் குழு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன மறுத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு