நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் செய்த நல்ல காரியம்

ஆசிரியர் - Admin
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் செய்த நல்ல காரியம்

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து சம்பியன் வீதி, நந்தாவில் வீதி, அம்மன் வீதி ஆகிய வீதிகளைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுக்கான வாளிகள் மற்றும் குப்பைகளை வீதிகளில் போடுவதற்கு ஏதுவாகத் தயாரிக்கப்பட்ட வண்டில்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதற்கான நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(25) முற்பகல்-10 மணி முதல் கொக்குவில் இராமகிருஷ்ணா பாடசாலையில் நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் சு. சுதர்ஜன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராஜா, மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எஸ். சுகிர்தன், நல்லூர்ப் பிரதேச சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஜெயகரன் ஆகியோர் கலந்து கொண்டு திண்மக் கழிவகற்றலுக்கான 300 வாளிகள், குப்பைகளை வீதிகளில் போடுவதற்கு ஏதுவாகத் தயாரிக்கப்பட்ட வண்டில்கள் போன்றவற்றைப் பொதுமக்களுக்குச் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைத்தனர். நிகழ்வில் பிரதேசப் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு