ஆர்னோல்டை ஆரத்தழுவிய எம்.பிக்கள்: -கைத்தொலைபேசி மூலம் வழி நடத்தப்பட்ட உறுப்பினர்கள்?

ஆசிரியர் - Admin
ஆர்னோல்டை ஆரத்தழுவிய எம்.பிக்கள்: -கைத்தொலைபேசி மூலம் வழி நடத்தப்பட்ட உறுப்பினர்கள்?

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவுக்காக இன்று காலை கூடிய போது,சபா மண்டபத்தினுள் பல உறுப்பினர்கள் கைத்தொலைபேசியில் உரையாடிய வண்ணம் காணப்பட்டனர்.

யாழ்.மாநகர சபை மேயர் தெரிவுக்கு உறுப்பினர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன. தமிழரசு கட்சி சார்பில் இமானுவேல் ஆனோல்ட், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் விஸ்வலிங்கம் மணிவண்ணன், ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் முடியப்பு ரெமீடியஸ் ஆகியோர் பிரேரிக்கப்பட்டனர். அதை அடுத்து வாக்கெடுப்பு மூலம் மேயர் தெரிவு செய்யப்படுவார் என ஆணையாளர் தெரிவித்தார். அதனை அடுத்து வாக்கெடுப்புகள் நடத்தபட்டன.

அப்போது பல உறுப்பினர்கள் கைத்தொலைபேசியில் உரையாடிய வண்ணம் காணப்பட்டனர். வாக்கெடுப்பின் போது தாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் தொலைபேசி ஊடாக தமது கட்சி தலைமைகளிடம் ஆலோசனை கேட்டார்களா? என அங்கிருந்த பலரும் சந்தேகம் வெளியிட்டனர்.

அதேவேளை, யாழ்.மாநகர சபை மேயராகத் தெரிவு செய்யப்பட்ட இமானுவேல் ஆனோல்ட்க்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டித்தழுவி தமது பாராட்டுக்களை தெரிவித்தனர். யாழ்.மாநகர சபை மேயராக இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவாகி பொறுப்பேற்று, சபை அமர்வை முடித்துக் கொண்டு திரும்பும் போது, சபா மண்டபத்தினுள் சென்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் கட்டித்தழுவி கைலாகு கொடுத்து தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு