யாழ்.மாநகர மக்களின் நலனை கருத்தில் கொண்டும் அனைவரும் ஒற்றுமையாக பயணிப்போம் :- இமானுவேல் ஆர்னோல்ட் VIDEO

ஆசிரியர் - Admin
யாழ்.மாநகர மக்களின் நலனை கருத்தில் கொண்டும் அனைவரும் ஒற்றுமையாக பயணிப்போம் :- இமானுவேல் ஆர்னோல்ட் VIDEO

யாழ்.மாநகர மக்களின் நலனை கருத்தில் கொண்டும் , அபிவிருத்தியை கருத்தில் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக பயணிப்போம் என யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையின் அமர்வு முடிவற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இந்த இடம் மக்கள் அளித்த ஜனநாயக உரிமையை கட்சி பேதமின்றி மக்களின் நலனை கருத்தில் கொண்டு நகர அபிவிருத்திக்காக ஒற்றுமையுடன் தான் செயற்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் அதானால் அனைவரும் கட்சி பேதமின்றி ஒற்றுமையாக பயணிக்க வேண்டும்.

எங்கள் மாநகரத்தை பசுமையான மாநகரமாக மாற்ற வேண்டும். அதில் உறுப்பினர்கள் இடையில் மற்று கருத்து இல்லை அனைவரின் இலக்கும் ஒன்று இங்குள்ள வரலாற்று சின்னங்கள் . சமய அனுஷ்டானங்கள் எல்லாவற்றையும் அவர்களுக்கு உரிய முறையில் மதிப்பளித்து மத தலைவர்கள் அந்த மத சம்பிரதாயங்கள் என அனைத்தையும் மதித்து அவர்களின் ஆலோசனைகளை பெற்று செயற்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் பழமை வாய்ந்த நகரம் இங்கு பல தொன்மையான சின்னங்கள் உள்ளன. நல்லூர் ஆலயம் நல்லூர் இராசதானி என வரலாற்று பின்னணி உள்ள வரலாற்று பொக்கிசங்களை பேணி பாதுகாத்து மதிப்பளிக்க வேண்டும். எனவே மக்களின் நலனுக்காக மாநகரத்தின் அபிவிருத்திக்காக அனைவரும் ஒற்றுமையுடன் பயணிப்போம். என தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு