பெரும்பான்மை பெறாத சபைகளில் தலையிடமாட்டோம்! - கூட்டமைப்பு

ஆசிரியர் - Admin
பெரும்பான்மை பெறாத சபைகளில் தலையிடமாட்டோம்! - கூட்டமைப்பு

உள்ளூராட்சி சபைகளில், கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற கட்­சி­கள் அந்­தந்த சபை­க­ளில் ஆட்சி அமைக்­க ­வேண்­டும். ஆட்சி அமைக்­கும் கட்­சி­களே, மேயர், பிரதி மேயர், தவி­சா­ளர், உப தவி­சா­ளர்­க­ளைத் தீர்­மா­னிக்­க­வேண்­டும். அதற்கு ஏனைய கட்­சி­கள் ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் “வடக்­கில் 30 சபை­க­ளில் தொங்கு சபை­கள் அமைந்­துள்­ளன. அந்­தச் சபை­க­ளில் கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்­றுக் கொண்ட கட்சி ஆட்சி அமைக்­க ­வேண்­டும் என்­ப­தும், அதற்கு ஏனைய கட்­சி­கள் ஆத­ரவு வழங்­க­வேண்­டும் என்­ப­தும் சிவில் சமூ­கத்­தி­னால் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்கை. கூட்­ட­மைப்பு ஆரம்­பத்­தி­லி­ருந்து அந்த நிலைப்­பாட்­டுக்கு ஆத­ரவு வழங்கி வரு­கின்­றது.

நாம் பெரும்­பான்மை பெற்ற சபை­க­ளில் ஆட்சி அமைப்­போம். அந்­தச் சபை­க­ளின் மேயர், பிரதி மேயர், தவி­சா­ளர், உப தவி­சா­ளர் உள்­ளிட்­டோரை நாம் தெரிவு செய்­வோம். அதற்கு ஏனைய கட்­சி­கள் ஒத்­து­ழைப்பு வழங்­க­ வேண்­டும். இதே­போன்று ஏனைய கட்­சி­கள் ஆட்சி அமைக்­கும் சபை­க­ளில் அந்­தக் கட்­சி­களே தமது தவி­சா­ளர், உப தவி­சா­ளரை அறி­விக்க முடி­யும். அதில் நாம் தலை­யி­ட­மாட்­டோம்.

மேலும், கூட்­ட­மைப்­பின் சகல கட்­சித் தலை­வர்­கள், மாந­கர சபை உறுப்­பி­னர்­கள் எல்­லோ­ரும் இணைந்­து­தான் மேய­ராக ஆனோல்ட்­டை­யும், பிரதி மேய­ராக ஈச­னை­யும் தெரிவு செய்­தார்­கள். அதில் எந்­த­வொரு மாற்­ற­மும் இல்லை என்­றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு