மீண்டும் தனிமைப்படுத்தல் உத்தரவு..! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
மீண்டும் தனிமைப்படுத்தல் உத்தரவு..! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..

பல்பொருள் அங்காடிகளிலும், பேருந்துகளிலும் தேவையில்லாமல் மக்கள் குடும்பம் குடும்பமாக கூடுவதை அவதானிக்க முடிகிறது. இதனால் மே மாதத்தில் இருந்து தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய நிலை உருவாகும். 

மேற்கண்டவாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், கடந்த இரு நாட்களில் பல பகுதிகளில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 

வரம்பை மீறி 500 முதல் 1,000 பேர் வரை ஒன்று கூடியமையை அவதானித்துள்ளதாகவும் அவர் கூறினார். இவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயற்படுவதால் ஏற்படும் விளைவுகளை 

அடுத்த சில நாட்களில் பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் உபுல் ரோஹன குறிப்பிட்டார். இந்த நடவடிக்கைகள் காரணமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுபவர்களும் 

பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு