யாழில் வாந்தியெடுத்தவர் உயிரிழப்பு

யாழில் திடீரென நோய் வாய்ப்பட்டு வாந்தியெடுத்தவர் உயிரிழந்துள்ளார்
கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார சிற்றூழியரான நீர்வேலி - பூதர்மட பகுதியை சேர்ந்த குணரத்தினம் குணாதரன் (வயது 41) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திடீரென நோய்வாய்ப்பட்டு, வாந்தி எடுத்துள்ளார்.
அதனை அடுத்து அவரை உறவினர்கள் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதித்தனர். வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.