SuperTopAds

ஜெய் ஆகாஷின் திரைப்படத்தில் ஈழ கலைஞர்களுக்கு வாய்ப்பு

ஆசிரியர் - Editor II
ஜெய் ஆகாஷின் திரைப்படத்தில் ஈழ கலைஞர்களுக்கு வாய்ப்பு

இலங்கையில் உள்ள கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் முகமாக இலங்கையில் திரைப்பட உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவரும் , பிரபல நடிகருமான ஜெய் ஆகாஷ் தெரிவித்துள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

இலங்கை கலைஞர்களுக்கு தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்றுவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க முயற்சித்தேன். அது முடியாமல் போய் விட்டது. அதனால் அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் முகமாக இலங்கையில் திரைப்படங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். 

நான் சினிமாவில் நிலைக்க காலம் எடுத்தமையால் , ஆரம்பத்தில் இலங்கை கலைஞர்களுக்கு வாய்ப்புக்களை வழங்க முடியவில்லை. 

தெலுங்கு சினிமாவில் இலங்கை கலைஞர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பது மிக கடினம். தமிழ் சினிமாவில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க , நான் தமிழ் சினிமாவில் நிலைக்க வேண்டிய தேவை இருந்தது. நான் எதிர்பார்த்த வெற்றி தமிழில் எனக்கு கிடைக்கவில்லை 

ஆனாலும் தமிழில் சின்னத்திரையில் எனக்கு வாய்ப்புக்கள் கிடைத்து. அதில் வெற்றி கண்ட போது , எமது கலைஞர்களுக்கு சின்னத்திரையில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க முயற்சித்தேன். அதிலும் எமது கலைஞர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. 

அதனால் நானே தற்போது திரைப்படங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். அதன் ஊடாக எமது கலைஞர்களுக்கு வாய்ப்புக்களை வழங்க உள்ளேன். 

இதனூடாக இலங்கை கலைஞர்களுக்கு திரைப்படங்களில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க முடியும் என மேலும் தெரிவித்தார். 

குறித்த ஊடக சந்திப்பில் தென்னிந்திய நடிகரானஷியாம்,  நடிகைகளான அம்மிருத மற்றும் ஜெசி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.