தேசிய மக்கள் சக்தியினர் சொன்னதை செய்பவர்களாம்

சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாங்கம் தான் எங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாகும். நாங்கள் அன்று கூறியது போல் ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பானது ஆனையிறவு உப்பு என்ற பெயருடன் விநியோகிக்கப்படவுள்ளது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
ஆனையிறவில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பானது கடந்த காலங்களில் ரஜ என்ற பெயரில் விநியோகிக்கப்பட்டது.
உடனடியாக நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காகவே பழைய பெயரிலேயே விநியோகிக்கப்பட்டது.
தற்போது, ஆனையிறவு உப்பு என்ற பெயரிலேயே உப்பு விநியோகிக்கப்படும். அது மட்டுமில்லாமல் உப்பின் விலை அதிகரித்துள்ளதால் தற்போது மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி எதிர்வரும் காலங்களில் உப்பின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைளை நாம் மேற்கொள்வோம் என தெரிவித்தார்