பொலிசாரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தையிட்டியில் தொடரும் போராட்டம்

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார் காணிகளில் அடாத்தாக கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரையை அகற்றி தமது காணிகளை கையளிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணி உரிமையாளர்களை பொலிஸார் புகைப்படம் , வீடியோ எடுத்து அச்சுறுத்தியுள்ளனர்.
தையிட்டி விகாரைக்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காணி உரிமையாளர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் விகாரையை அகற்ற வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
அதன் போது விகாரை பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு பணித்துள்ளனர்.
அத்தனையும் மீறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டமையால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அச்சுறுத்தியுள்ளதுடன் , அவர்களை புகைப்படம் மற்றும் காணொளிகள் எடுத்துள்ளனர்.
பொலிசாரின் அச்சுறுத்தல்களையும் மீறியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது