அனலைதீவில் வைத்திய முகாம்

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனை ஆகியவற்றின் அனுசரணையுடன், அனலைதீவு வைத்தியசாலையில் விசேட வைத்திய முகாம் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
அதன் போது, நூற்றுக்கணக்கானவர்கள் விசேட வைத்திய நிபுணர்களை சந்தித்து, தங்களுடைய நோய் நிலைகளுக்கான சிகிச்சைகளையும், தொடர்ந்து மேலதிக சிகிச்சை பெறுவதற்கான வழிமுறைகளையும் பெற்றுள்ளனர்.
இந்த மருத்துவ முகாமிற்கு யாழ் பிராந்திய கடற்படை தலைமையகம், கனடா அனலைதீவு ஒன்றியம் மற்றும் பல அமைப்புகள் அனுசரணை வழங்கியிருந்தன.