வடக்கில் உச்சம் கொடுக்கப் போகும் சூரியன்!: ஓர் முன்னறிவித்தல்

ஆசிரியர் - Admin
வடக்கில் உச்சம் கொடுக்கப் போகும் சூரியன்!: ஓர் முன்னறிவித்தல்

வடக்கு மாகாணத்தில் அடுத்தமாதம் 13 ஆம், 14 ஆம், 15 ஆம் திகதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த மூன்று தினங்களிலும் 36 பாகை செல்சியஸ் வரை வெப்பம் சுட்டெரிக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சூரியன் உச்சம் கொடுப்பதற்கான காலம் எதிர்வரும்- 05 ஆம் திகதி காலி மாவட்டத்தில் ஆரம்பமாகிறது. மறுநாளான 06 ஆம் திகதி அளுத்கமவிலும், 07 ஆம் திகதி மொரட்டுவயிலும் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது. எதிர்வரும்-13 ஆம் திகதி பகல்-12.10 மணிக்கு மன்னாரில் சூரியன் உச்சம் கொடுப்பதன் மூலம் வடக்கில் சூரியன் உச்சம் கொடுப்பதற்கான காலம் ஆரம்பமாகும்.

மறுநாளான 14 ஆம் திகதி பகல் 12.10 மணிக்கு கிளிநொச்சி, வட்டக்கச்சி ஆகிய பகுதிகளில் பகல்- 12.10 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும். எதிர்­வ­ரும் 15 ஆம் ­தி­கதி பகல் 12:10 மணிக்கு வட்­டுக்­கோட்டை மற்­றும் சுன்­னா­கம் ஊடாக கடல் பகு­திக்கு நகர்­கி­றது எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சூரியன் உச்சம் கொடுக்கும் காலங்களில் சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஓர் முன்னறிவித்தலாக இந்தத் தகவலை வெளியிடுகின்றோம்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு