தமிழகத்தில் 72.78 வீத வாக்கு பதிவு!! -முதலமைச்சரின் தொகுதியில் 85.33 வீதம் பதிவு-
தமிழக சட்டமன்ற தேர்தலில் 72.78 சதவீதமாக வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகார பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி அதிகபட்சமாக பாலக்கோடு தொகுதியில் 87.33 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
முதலமைச்சர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் 85.6 சதவீத வாக்குகளும், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் 60.52 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் சின் போடி தொகுதியில் 73.65 சதவீத வாக்குகளும், பா.ஜ.க மாநில தலைவர் முருகனின் தாராபுரம் தொகுதியில் 74.14 சதவீத வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் கோவை தெற்கு தொகுதியில் 60.72 சதவீத வாக்குகளும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் திருவொற்றியூர் தொகுதியில் 65 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் கோவில்பட்டி தொகுதியில் 67.43 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் 58.41 சதவீத வாக்குகளும், பா.ஜ.க சார்பில் நடிகை குஸ்புவின் ஆயிரம் விளக்கு தொகுதியில் 58.4 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.