300 கிலோ போதைப்பொருள் மற்றும் AK-47 துப்பாக்கிகளுடன் சிக்கிய 6 இலங்கையர்கள்..! அதிர்ச்சியில் இந்தி கடலோர காவல்படை..
சுமார் 300 கிலோ போதைப் பொருள் மற்றும் AK -47 துப்பாக்கிகளுடன் 6 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக இலங்கை கடலோர காவல் படையினர் கூறியுள்ளனர்.
கேரள கடற்பரப்பில் இந்த படகைஇந்திய கரையோர காவல்படையினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கையை நோக்கி சென்றுகொண்டிருந்த ரவிஹன்சி என்ற படகினை
கைப்பற்றியதுடன் 6 இலங்கை பிரஜைகளை கைதுசெய்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்திய கரையோரகாவல்படையினருக்கும்
போதைப்பொருள கட்டுப்பாட்டு பிரிவினருக்கும் கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த படகு இடைமறிக்கப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
300கிலோகிராம் ஹெரோயினையும் ஐந்து ஏகே 47துப்பாக்கிகளையும் கைப்பற்றியுள்ளோம் பல முக்கியமான ஆவணங்களும்சிக்கியுள்ளன
என இந்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.301 பொதிகளில் போதைப்பொருள் காணப்பட்டது படகின் நீர்தாங்கிக்குள் அவற்றை மறைத்து வைத்திருந்தனர்.
எனவும் இந்திய அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.போதைப்பொருள் பொதிகளில் பறக்கும் குதிரையின் படம் காணப்படுகின்றது.
இது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் தங்கள் போதைப்பொருள்களை அடையாளப்படுத்துவதற்காக பயன்படுத்தும் தந்திரோபாயம் எனவும் இந்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது போதைப்பொருட்கள் ஆயுதங்களுடன் ஈரானின் சபஹர்துறைமுகத்திலிருந்து வந்த கப்பலொன்று நடுக்கடலில் வைத்து இலங்கையர்களிடம் அவற்றை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பின்னர் போதைப்பொருட்களையும் ஆயுதங்களையும் இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சி இடம்பெற்றவேளையே இந்திய அதிகாரிகள் அவற்றை கைப்பற்றியுள்ளனர்.
எல்வை நந்தன,எச்கேஜிபி தாசப்பிரிய ஏஎச்எஸ் குணசேகர எஸ்ஏ செனெரத் டி நிசங்க என்ற ஐந்து இலங்கையர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பாக்கிஸ்தானைசேர்ந்த போதைப்பொருள் குழுவொன்று இதில்தொடர்புபட்டிருப்பது தெரியவந்துள்ளதாக இந்திய அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.