30 ரூபாய் வாழைப்பழத்திற்கு சண்டை..! குத்தி கொல்லப்பட்ட உணவக பணியாளர், கொலையாளியை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் கொடுத்த மக்கள்..
30 ரூபாய் பெறுமதியான வழைப்பழத்தினால் உருவான தகராலில் உணவகத்தில் பணியாற்றிய ஒருவர் கண்ணாடி போத்தலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குருநாகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
உணவகம் ஒன்றில் வாழைப்பழம் வாங்கிய நபர் ஒருவர் அதற்கான பணம் 30 ரூபாயை கொடுக்க மறுத்துள்ளதுடன் உணவக உரிமையாளர் வாழைப்பழத்திற்கு அதிக பணம் கேட்பதாக கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து தகராறு புரிந்துள்ளதுடன் கைகலப்பிலும் ஈடுபட்டிருக்கின்றார். இதன்போது உணவக பணியாளர் ஒருவர் குறுக்கிட்ட விபரத்தை கூற முனைந்தபோது
அங்கிருந்த போத்தல் ஒன்றை உடைத்து உடைந்த போத்தலால் ஊழியரை குத்திவிட்டு தப்பி ஓடி தொலைபேசி கடை ஒன்றுக்குள் ஒழிந்திருந்த நிலையில் அங்கிருந்தவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு
பொலிஸாரிடம் ஒப்படைக்கத்துள்ளனர். இதேவேளை உடைத்த போத்தலால் குத்தப்பட்ட நிலையில் படுகாயமடைந்த உணவக ஊழியர் வைத்தியசாலை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.