புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் ரயலட்பார் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டவர் மீண்டும் விளக்கமறியலில்

ஆசிரியர் - Admin
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் ரயலட்பார் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டவர் மீண்டும் விளக்கமறியலில்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் முதலாவது சந்தேகநபராக இருந்து  ரயலட்பார் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டு பின்னர்பொலிஸார் மற்றும் சாட்சிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் விறக்கமறியலில் உள்ள பூபாலசிங்கம் இந்திரகுமாரது விளக்கமறியாலனது எதிர்வரும் 28ஆம் திகதி வரை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து கிடைக்கப்படவேண்டிய அறிக்கை தமக்கு கிடைக்கவில்லை என பொலிஸார் மன்றுக்கு தெரிவித்ததனை தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஒத்திவைத்து விளக்கமறியலில் வைக்கவும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

இன்றைய தினம் இவ் வழக்கனாது ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியால் முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை குறித்த நபர் அம் மாணவியின் பாலியல் வல்லுறவு படுகொலை தொடர்பான வழக்கானது ஊர்காவற்றுறை நீதிமன்றில் இடம்பெறும்போது ஒருமுறை வழக்கு விசாரனை நிறைவடைந்து செல்லும் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது பெயரினை கூறி அவருக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு