குப்பிளானில் இரவோடிரவாக திருடர்கள் அட்டகாசம்

ஆசிரியர் - Admin
குப்பிளானில் இரவோடிரவாக திருடர்கள் அட்டகாசம்

யாழ். குப்பிளான் தெற்கிலுள்ள தோட்ட நிலக் கிணறுகளுக்குள் விடப்பட்டிருந்த ஐந்து நீர் இறைக்கும் இயந்திரங்களின் பைப்புக்களிலிருந்து கப்ளிங், புட்பால் போன்றவை திருடர்களால் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. 

அத்துடன் குறித்த பகுதியில் செய்கை பண்ணப்பட்டிருந்த புகையிலைப் பயிர்களும் திருடர்களால் வெட்டப்பட்டு அட்டாகாசம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை(19) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தோட்ட வெளியில் அடுத்தடுத்து அமைந்துள்ள கிணறுகளுக்குள் விடப்பட்டிருந்த நீளமான பைப்புக்கள் வெளியே எடுக்கப்பட்டு மேற்படி பொருட்கள் வெட்டி எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. பைப்புக்கள் கிணற்றுக்கு வெளியே வீசப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இவ்வாறு வெட்டப்பட்ட பைப்புக்கள் மீண்டும் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாகப் பாதிக்கப்பட்ட விவாசாயிகள் தெரிவித்துள்ளனர். திருட்டுப் போன பொருட்களின் பெறுமதி பல ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

திருடர்கள் குறித்த பகுதியில் அறுவடைக்குத் தயாரான நிலையிலிருந்த புகையிலைப் பயிர்களையும் நாசப்படுத்திச் சென்றமை தொடர்பில் அப்பகுதி விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த திருட்டுத் தொடர்ந்தும் இடம்பெறக் கூடிய சூழ்நிலை காணப்படுவதால் திருட்டைக் கட்டுப்படுத்த சுன்னாகம் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு