வடக்கில் நான்கு உள்ளுராட்சி சபைகள் நாளை ஆரம்பம்

ஆசிரியர் - Admin
வடக்கில் நான்கு உள்ளுராட்சி சபைகள் நாளை ஆரம்பம்

வடக்கு மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் ஊர்காவற்துறைப் பிரதேச சபை, கிளிநொச்சியில் பூநகரி பிரதேச சபை, முல்லைத்தீவில் புதுக்குடியிருப்புப் பிரதேச சபை, வவுனியாவில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபை ஆகிய நான்கு உள்ளுராட்சி சபைகளின் முதலாவது அமர்வு நாளை- 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளன. குறித்த சபைகளைக் கைப்பற்றியுள்ள கட்சிகளின் செயலாளர்களால் பெயர் குறிக்கப்பட்ட தவிசாளர் தலைமையில் முதலாவது அமர்வு நடைபெறவுள்ளன.

வடக்கில் பெரும்பாலான உள்ளுராட்சி சபைகளில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையிலேயே சபைகளின் முதலாவது அமர்வு இடம்பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாத தொங்கு நிலையிலுள்ள சபைகளில் முதலாவது அமர்வில் தவிசாளர், உபதவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பது சட்டமாகவுள்ளது.

யாழ். மாவட்டத்தில் ஊர்காவற்துறையைப் பிரதேச சபையைத் தவிர ஏனைய சபைகளான யாழ்.மாநகர சபை, 3 நகர சபைகள், 12 பிரதேச சபைகளில் வடக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் முதலாவது அமர்வு இடம்பெறவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு